சோழவந்தான் பகுதியில் பெய்த மழையால் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

சோழவந்தான் பகுதியில் பெய்த மழையால் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
X

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் பெய்த காற்றுடன் கூடிய மழையால் சேதமடைந்த வாழை மரங்கள்.

சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையால் ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் சேதமடைந்தன

சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையால் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான, தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை உள்பட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில், கிணற்றுப்பாசனம் மூலம் நடவு செய்யப்பட்ட சுமார் 10.000த்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகின. முள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சேகர், தங்கப்பாண்டி, லட்சுமி ,மார் நாட்டான் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகளால் பயிரிடப்பட்டிருந்த வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பந்தமாக அரசு அதிகாரியிடம் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு முறையிட்டும், எந்த ஒரு அதிகாரியும் நேரில் பார்க்க வரவில்லை என்றும், ஆகையால் தோட்டக்கலைதுறை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.இதேபோல், சென்ற ஆண்டும்விவசாயிகள் பாதித்த போது எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்றும் இந்த ஆண்டாவது உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!