மதுரை நகரில் நடந்த குற்ற சம்பவங்கள்: போலீஸார் விசாரணை

மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்கள் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரை நகரில் நடந்த குற்ற சம்பவங்கள்: போலீஸார் விசாரணை
X

பைல் படம்

தெப்பக்குளம் பகுதியில் பூட்டிய அறைக்குள் வாலிபர் மரணம்: போலீஸ் விசாரணை

மதுரை, தெப்பக்குளம் காமராஜர் சாலை வெங்கடபதி ஐயங்கார் தெருவை சேர்ந்தவர் நசீர் மகன் நாகூர் கனி 32. இவர், மிட்டாய் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார் .பிரேமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துவிட்டு சென்ற நாகூர் கனி வீடு திரும்பவில்லை. பிரேமாவுக்கு குழந்தை பிறந்திருந்ததால் அவர் அருகில் உள்ள தாய்வீட்டில் இருந்து வந்தார்.இந்த நிலையில், கணவர் மீண்டும் சில நாட்களாக வரவில்லை.அவருக்கு போன் செய்தும் கிடைக்க வில்லை.அப்போது தான் அவர்கள் வீடு தொடர்ந்து பூட்டிக்கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

இதனால், சந்தேகம் அடைந்த பிரேமா, அந்த வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது அங்கு நாகூர்கனி படுத்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து, அவர் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் உயிரிழந்த நாகூர் கனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .இது குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிதி நிறுவன துணை மேலாளர் பாத்ரூமில் மயங்கி விழுந்து மரணம்

மதுரை,காளவாசல், பொன்மேனி முனியாண்டி கோவில் தெரு ராஜேந்திரன் மகன் திருநாவுக்கரசு 30.இவர், மாற்றுத்திறனாளி ஆவார் .பி.எஸ்.சி.பட்டதாரியான இவர், காளவாசலில் அட்டிகா கோல்ட் கம்பெனி என்ற நிதி நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வந்தார் .அவர் பணியில் இருந்த போது பாத்திரூமிற்குச் சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதை தொடர்ந்து சந்தேகமடைந்த ஊழியர்கள் பாத்ரூமின் கதவை உடைத்து பார்த்த னர். அங்கு ரத்த காயத்துடன் திருநாவுக்கரசு மயங்கி கிடந்தார். அவரது நாடியில் பலமாக அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, அவருடைய உறவினர் மயிலம்மாள் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, நிதநிறுவன துணை மேலாளர் திருநாவுக்கரசின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியார் பேருந்து நிலையத்தில் பணம் திருட்டு: இரண்டு பெண்கள் கைது:

விருதுநகர் மாவட்டம், கம்பக்குடி காரியாபட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் மாரி மனைவி லட்சுமி 45. மூத்த மகன் ஆண்டிசாமியுடன் மதுரை வந்திருந்தார் .இவர் இவர் காய்கறி வியாபாரமும் ,சேலை வியாபாரமும் செய்து வருகிறார். இந்த நிலையில் பெரியார் பேருந்து நிலையத்தில் இறங்கி அவர் நடந்து சென்ற போது அவரை இரண்டு பெண்கள் பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் லட்சுமி கவனத்தை திசை திருப்பி அவர்கள் கொண்டு சென்ற கட்டப்பையை பிளேடால் அறுத்தனர்.அதிலிருந்து சுருக்குப்பையை திருடினர்.அந்தப்பையில் ரூ 1910 வைத்திருந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த லட்சுமி கூச்சல் போட்டார்.இதனால், அந்த இரண்டு பெண்களும் தப்பி ஓட ஆரம்பித்தனர். இவ்வாறு கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்த பயணிகள் அவர்களை விரட்டி பிடித்தனர்.பின்னர் அவர்களை திடீர் நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ,அந்த இரண்டு பெண்களிடம் விசாரணை நடத்திய போது, கூடலூர் சுதுக்குளம் ராஜன் மனைவி கீதா40, கூடலூர் பிள்ளையார் கோவில் தெரு சங்கர் மனைவி சுமதி 40 என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

குழந்தை யிடம் நகை திருட்டு:வேலைக்கார பெண் கைது.

மதுரை தல்லாகுளம் நாராயணபுரம் மேற்கு ஜேகே நகர் நான்காவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தினகரன் மகன் ஜகா வீரநாதன் 38. இவரது வீட்டில், ஆத்திகுளத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி மகாலட்சுமி வீட்டு வேலைகள் செய்து வந்தார் .

சம்பவத்தன்று குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தபோது, அவர் அணிந்திருந்த ஒன்னேகால் பவுன் செயின் மாயமானது. இது குறித்து வேலைக்கார பெண்ணிடம் குழந்தையின் பெற்றோர் கேட்டனர்.இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்துவிட்டார்.பின்னர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது வேலைக்காரப் பெண் மகாலட்சுமி குழந்தையிடம் இருந்து ஒன்னேகால் பவுன் செயினை திருடியது பதிவாகி இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து , ஜெகவீரநாதன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு ப்பதிவு செய்து, மகாலட்சுமியை கைது செய்தனர். இதற்கு முன் அதே வீட்டில் 4 பவுன் செயின் ஒன்றும் திருடப்பட்டிருந்தது.அந்த நகையையும் மகாலட்சுமிதான் திருடியது விசாரணையில் தெரியவந்தது. அவர் வேலை பார்த்த அந்தவீட்டில் மொத்தம் ஐந்தே கால் பவுன் நகை திருடியுள்ளார்.இதனால், போலீசார் மகாலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.

கூடல் புதூரில் இரண்டரை கிலோ கஞ்சாவுடன் பெண் உட்பட இரண்டு பேர் கைது:

மதுரை ,கூடல் புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புலிக்குட்டி அய்யனார் இவர், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சொக்கலிங்கம் நகர் மூன்றாவது தெருவில் கஞ்சா விற்பதாக தெரிய வந்தது. அங்கு ரகசியமாக கண்காணித்தார். அப்போது பைக் ஒன்றில் வைத்து பெண் உள்பட 3 பேர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசாருடன் சுற்றி வளைத்தார். அவர்களில் இரண்டு பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், புதூர் சொக்கலிங்கம் நகர் மூன்றாவது தெரு பூபதி மகன் வேல்முருகன் 29, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி கார்த்திகா 33 என்று தெரியவந்தது.அவர்கள் இருவரையும், கைது செய்தனர்..தப்பியோடிய நபர் சிக்கந்தர் சாவடி சக்கரத்தாழ்வார் தெரு மணிகண்டன் மகன் மனோஜ் குமார் 25 என்று தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர் அவர்களிடம் இருந்த இரண்டரை கிலோ கஞ்சாவையும் பதுக்கி வைத்திருந்த பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொலை முயற்சி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது:

மதுரை,செல்லூர் அஹிம்சாபுரம் மாயாண்டி மகன் விஜி என்ற கருவாயன் 34. இவர் கொலை முயற்சி வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் அடிக்கடி இந்த சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், அவரது நடவடிக்கையை கட்டுப்படுத்த அவரை குண்டர்சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, மாயாண்டி மகன் விஜி என்ற கருவாயனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Updated On: 23 Sep 2023 5:00 PM GMT

Related News