மதுரையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்: மாநகராட்சியில் ஆலோசனை

மதுரையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்: மாநகராட்சியில்  ஆலோசனை
X

சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ,மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டம் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

மதுரையில், சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க ஆலோசனை:

மதுரை மாநகராட்சி பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டம் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ,மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா கடனுதவி வழங்கும் திட்டம் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி வழங்குவது குறித்து ,வங்கிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கங்களுடனான ஆலோசனைக்கூட்டம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கான தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் மூலம், பல்வேறு கடனுதவி வழங்கும் திட்டத்தின் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இம்முகாமில் ,

புதியதாக கடனுதவி பெறும் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக கடன் உதவி தொகை ரூ.10000ம் கடன் பெற்று கடன் செலுத்தியவர்களுக்கு இரண்டாம் கட்டமாக கடன் தவணை தொகையாக ரூ.20000ம் அதனை செலுத்தியவர்களுக்கு கடன் உதவி,

மூன்றாம் கட்டமாக கடன் உதவி தொகையாக ரூ.50000ம் அனைத்து வங்கிகள் மூலமாக மிக குறைவான வட்டி விகிதத்தில் கடன் தொகை விண்ணப்பித்த அன்றே வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்து வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 14402 சாலையோர வியாபாரிகள் பயன்பெற்று உள்ளனர். மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் அனைத்து வங்கிகளும் கடனுதவி வழங்க வேண்டும்.

கடனுதவி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தாமல் விண்ணப்பித்த அன்றே கடனுதவி வழங்குவதற்கு வங்கிகள் முன்வர வேண்டும். இத்திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்குவதற்கு வங்கிகள் அதற்கென பொறுப்பு அலுவலர்களை நியமித்து தனிக்கவனம் செலுத்தி கடனுதவி வழங்கிட வேண்டும் என, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் 01.09.2023 அன்று அனைத்து வங்கிகளுடன் சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு கடன் மேளா மதுரை மாநாட்டு மையம் தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில்,துணை மேயர் தி.நாகராஜன் நகர் நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன்,வீரன், சிவசுப்பிரமணியன், கோபால், சுகாதார ஆய்வாளர்கள், பாரத ஸ்டேட் வங்கி கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,பேங்க் ஆப் இந்தியா மற்றும் அனைத்து முன்னணி வங்கி மேலாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!