மதுரையில் 9 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: மாவட்ட ஆட்சியர் தகவல்
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர்
மாநகராட்சியில் 100 வார்டுகள், நகராட்சி 78 வார்டுகள், பேரூராட்சி 135 வார்டுகள் என மொத்தம் 313 வார்டுககளில் பதிவான வாக்குகள் 9 மையங்களில் எண்ணப்பட உள்ளன என்றார் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்.
மதுரையில் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் மேலும் கூறியதாவது:3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.ஒவ்வொரு மையத்திலும் சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படும்.மாநகராட்சியில் பதிவான வாக்குகள் 12 வாக்கு எண்ணும் அறைகளில் 104 மேஜைகளில் எண்ணப்பட உள்ளன.அதிக பட்சமாக ஒரு வார்டுக்கு 8 சுற்றுகள் நடைபெறும்.
நகராட்சியில் பதிவான 3 அறைகளில் வாக்குகள் 20 மேஜைகளில் எண்ணப்பட உள்ளன.அதிகபட்சமாக 9 சுற்றுகள் வரை நடைபெறும். திருமங்கலம் நகராட்சியில் 9 சுற்றும், மேலூர் 8 சுற்றும், உசிலம்பட்டியில் 5 சுற்றிலும் எண்ணப்பட உள்ளன.பேரூராட்சியில் பதிவான வாக்குகள் 9 அறைகளில் 21 மேஜைகளில் எண்ணப்பட உள்ளன.பரவை, எழுமலை பேரூராட்சிகளில் அதிகபட்சமாக 9 சுற்றாகவும், மீதமுள்ள பேரூராட்சிகள் 8 சுற்றாகவும் நடைபெற உள்ளன.
561 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.1 அறைக்கு 3 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 72 நுண் பார்வையாளர்கள்.தபால் வாக்குகள் 8 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.நகராட்சி, பேரூராட்சிகளில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு மிஷினில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டுக்கும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மிஷினில் பதிவானவை எண்ணப்படும்.
பூத் ஏஜென்ட்களுக்கு தேர்தல் அலுவலர் வழங்கிய ஐடி கார்டு, ஆதார்/வாக்காளர் அட்டை, தடுப்பூசி சான்றிதழ்/கொரோனா தொற்று இல்லை எனும் சான்றிதழ் அவசியம்.அலைபேசி, கேமரா எடுத்த வர அனுமதி இல்லை.தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் எதுவும் நடத்த அனுமதி இல்லை. என்றார் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu