மதுரையில் கோ ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

மதுரையில் கோ ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
X

மதுரை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், 2021-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை 2021-22ல் விற்பனை குறியீடாக ரூ.250.00 இலட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை 2021-2022-ல் விற்பனை குறியீடாக ரூ.250.00 இலட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தகவல்:

மதுரை மாவட்டம், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், 2021-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையினை வெங்கலக்கடைத் தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கயற்கண்ணி ஏ.சி. பட்டு மாளிகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு தொடர்ந்து 86 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும் தான் முக்கிய காரணம் ஆகும்.

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டு தோறும், பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளில் மென் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள் ,படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்தமான இரகங்கள் தீபாவளி பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக, செட்டிநாடு சேலைகள் கைத்தறி சுங்கடி சேலைகள் நவக்கிரஉறா காட்டன் சேலைகள் மதுரை மற்றும் தஞகாவூர் காட்டன் சேலைகள் பரமக்குடி 1000 புட்டா சேலைகள் ஏற்றுமதி இரகங்கள் ஆகியவை பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக பருத்தி சட்டைகள், தூய பருத்தி சட்டைகள், பாலிகாட்டன் சட்டைகள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ் இரகங்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது.கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைத்தளத்தின் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

மதுரை மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 17 விற்பனை நிலையங்களின் மூலம் 2021-2022-ஆம் ஆண்டிற்கு விற்பனை குறியீடாக 2000 இலட்சங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள நான்கு விற்பனை நிலையங்களின் விற்பனை குறியீடாக முறையே 670 இலட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கயற்கண்ணி விற்பனை நிலையத்தில் சென்ற ஆண்டு தீபாவளி விற்பனை 120.87 இலட்சங்கள் ஆகும். நடப்பு ஆண்டு 2021-2022-ல் விற்பனை குறியீடாக ரூ.250.00 இலட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, மண்டல மேலாளர் ஆர்.மோகன்குமார், மேலாளர் (தணிக்கை) ஜெ.நாகராஜன், மேலாளர் எஸ்.ஞானப்பிரகாசம் விற்பனை மேலாளர் பி.மீனாட்சி சுந்தரம் ரக மேலாளர் எஸ்.பாடலிங்கம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
புற்றுநோய் வராம இருக்க டெய்லி இத பண்ணுங்க..! என்னென்ன பண்ணனும்னு தெரியுமா?..