மதுரையில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X
கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம், மதுரை மாநகர் மதுரை புறநகர் மாவட்ட கூட்டுறவு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், நியாயவிலைக் கடை கூட்டுறவு ஊழியர்களைத் துன்புறுத்தக் கூடாது, அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி வழங்கவேண்டும், தரமற்ற பொருட்களை விநியோகிக்க ரேசன் கடை விற்பனையாளர்கள் வற்புறுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியூ மாவட்ட செயலர் ஆர் தெய்வராஜ், சிஐடியூ நகர் கூட்டுறவு ஊழியர் சங்க செயலர் லெனின் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business