மழையால் பாதித்த பயிர்கள் குறித்து அமைச்சர் மூர்த்தி ஆலோசனை

மழையால் பாதித்த பயிர்கள் குறித்து  அமைச்சர் மூர்த்தி ஆலோசனை
X

பயிர் பாதிப்பு குறித்து, மதுரையில் வேளாண் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் பி. மூர்த்தி.

மதுரையில், மழையால் பாதித்த பயிர்கள் பற்றி வேளாண் துறையினருடன், அமைச்சர் மூர்த்தி ஆலோசனை நடத்தினார்

மதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, பயிர்களின் நிலைமை பற்றி வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட வேளாண் இயக்குனர் .விவேகானந்தன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ரேவதி, துணை இயக்குனர் வேளாண் வணிகம் விஜயலட்சுமி, துணை இயக்குனர் நீர் மேலாண்மை லட்சுமி பிரபா, மதுரை விற்பனைக் குழு செயலாளர் மெர்சி ஜெயராணி, சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன் மற்றும் .வெங்கடேசன் ஆகியோருடன் கலந்துரையாடினார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிந்தார்.

முன்னாள் மாநில வேளாண்மை விற்பனை வாரியம் தலைவர் அக்ரி கணேசன், முன்னாள் வேளாண் வணிக துணை இயக்குனர் அருளரசு , ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!