மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கட்டுமானப் பணி: அமைச்சர்கள் ஆய்வு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கட்டுமானப் பணி: அமைச்சர்கள் ஆய்வு
X

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வீரவசந்தராயர் மண்டபம் புதுப்பித்து கட்டும் பணிகள் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்

Madurai Meenakshi Temple Latest News - Construction work on the Meenakshi Temple in Madurai

Madurai Meenakshi Temple Latest News - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வீரவசந்தராயர் மண்டபம் புதுப்பித்து கட்டும் பணிகள் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் , வீரவசந்தராயர் மண்டபம் புதுப்பித்து கட்டும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை வாயிலாக திருக்கோயில்கள் வளர்ச்சிக்காக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு100-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் குடமுழுக்கு பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதி உலா, திருக்குளங்களை புனரமைத்தல் திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்து கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த வீரவசந்தராயர் மண்டபத்தை புதுப்பித்து கட்டும் பணிகள், திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிகள் என மொத்தம் ரூபாய் 14.76 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள், தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் 10.06.2022-அன்று நாட்டப்பட்டது.

அதன்படி,இன்றைய தினம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில்,இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வீரவசந்தராயர் மண்டபம் புதுப்பித்து கட்டும் பணிகள்புது மண்டபம் பராமரிப்பு பணிகள், குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

ஆய்வை தொடர்ந்து, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு கூறியதாவது: வீரவசந்தராயர் மண்டபம் புதுப்பித்து கட்டும் பணிகளில் தனிக்கவனம் செலுத்தி விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை துரிதப்படுத்தி 3 ஆண்டுகால காலத்திற்குள் நிறைவேற்றிட திட்டமிடப்பட்டுள்ளது என, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, அரசு முதன்மைச் செயலாளர் சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை டாக்டர்.பி.சந்திரமோகன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு) மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் காலோன், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story