மதுரையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
மதுரையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை தேவர் சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார்.இதற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார்.
அந்த அவதூறு வழக்கில் ,காங்கிரஸ் எம்.பி .ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ,மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், தேவர் சிலை அருகே, காங்கிரஸ் கட்சி மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் தல்லாகுளம் முருகன், ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர் ஜீவன்மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
வழக்கின் பின்னணி...
4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, 2019ஆம் ஆண்டில் மோடி குடும்பப் பெயர் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளுடன் தொடர்புடையது. "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருப்பது எப்படி" என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
வியாழக்கிழமை அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். விசாரணையின்போது, எந்த சமூகத்தையும் தனது பேச்சு மூலம் புண்படுத்த விரும்பவில்லை என்று ராகுல் காந்தி கூறியதாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர்கள் குழு தெரிவித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu