வண்டியூர் கண்மாயில் உள்ள ஆகாயத் தாமரையை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வண்டியூர் கண்மாயில் உள்ள ஆகாயத் தாமரையை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
X

வண்டியூர் கண்மாய்.

வண்டியூர் கண்மாயில் உள்ள ஆகாயத் தாமரையை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை வண்டியூர் கண்மாயில் பல வருடங்களாக ஆகாயத் தாமரை படர்ந்துள்ளது. இதனால் மதுரை கே.கே. நகர் சுந்தரம் பார்க் அருகே விஷபூச்சிகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

இப்பகுதியில் தான், தினசரி அதிகாலை முதலே நடைபயிற்சியை ஏராளமானோர் மேற்கொள்கின்றனர். மேலும் இங்குள்ள பூங்காவில் குழந்தைகளும் வந்து விளையாடுகின்றனர்.

ஆகவே, மதுரை பொதுப்பணித் துறையினர் வண்டியூரில் கண்மாயில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி, படகு சவாரி விட்டால் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், கண்மாயும் மாசுபடுவது தடுக்கப்படும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!