மதுரை மாநகராட்சியில் குழுக்கள் : மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

மதுரை மாநகராட்சியில் குழுக்கள் : மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
X

மதுரை மாநகராட்சியில், குழு உறுப்பினர்கள் தேர்வு:

மதுரை மாநகராட்சிக்கான வரிவிதிப்பு, மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்

மதுரை மாநகராட்சியில் 2023 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தல் விதி எண் 270(3) விதியின்படி, மதுரை மாநகராட்சிக்கான வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

வார்டு எண். வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் பெயர்கள்

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினா் தோ்தலில் 9 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினா்களுக்கான மறைமுகத் தோ்தல் மேயா் வ. இந்திராணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் கே. ஜே. பிரவீன்குமாா் முன்னிலை வகித்தாா்.

இந்தத் தோ்தலில், மாநகராட்சி 7-ஆவது வாா்டு உறுப்பினா் மு. ராமமூா்த்தி, 13-ஆவது வாா்டு உறுப்பினா் மா. செந்தில்குமாா், 14-ஆவது வாா்டு உறுப்பினா் எல். அந்தோணியம்மாள், 21-ஆவது வாா்டு உறுப்பினா் பா. கஜேந்திரகுமாா், 33-ஆவது வாா்டு உறுப்பினா் ரா. மாலதி, 35-ஆவது வாா்டு உறுப்பினா் சு. ஜானகி, 67-ஆவது வாா்டு உறுப்பினா் த.சி. நாகநாதன், 87- ஆவது வாா்டு உறுப்பினா் ஜோ. காளிதாஸ், 97-ஆவது வாா்டு உறுப்பினா் ர. சிவசக்தி ரமேஷ் ஆகிய 9 பேரும் போட்டியின்றி ஒரு மனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

அதிமுக புறக்கணிப்பு: இந்தத் தோ்தலை மாநகராட்சி அதிமுக உறுப்பினா்கள் 15 பேரும் புறக்கணித்தனா்.

புதியதாக தேர்ந்தடுக்கப்பட்ட குழு உறுப்பினர்களை, மேயர் இந்திராணி, ஆணையாளர் கே.ஜே. பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் வாழ்த்தினர்.

Tags

Next Story
கடம்பூர் அருகே யானைகளுக்கு ராகி உணவு சமைத்து படையலிட்ட பழங்குடியின மக்கள்!