மதுரை மாநகராட்சி பள்ளிகளில், காலை உணவுத் திட்டம்! ஆணையாளர் ஆய்வு!

மதுரை மாநகராட்சி பள்ளிகளில், காலை உணவுத் திட்டம்! ஆணையாளர் ஆய்வு!
X

மதுரை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் வழங்கப்படுவதை ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆய்வு

மதுரை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் வழங்கப்படுவதை ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆய்வு

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 திரெளபதியம்மன் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுகள் வழங்கப்படுவதை ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 64 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவுகள் வழங்கப்படுகிறது.

மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், நூலக கட்டிடம், அறிவியல் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 15.09.2022 அன்று முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு 5 ஆம் வகுப்பு பயிலும் 26 தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை உப்புமா வகைகள் கிச்சடி வகைகள், பொங்கல் வகைகள், காய்கறி கிச்சடி உள்ளிட்ட பல்வேறு வகையான காலை உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 01.03.2023 முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவிட்டு இருந்தார்கள்.

அதன்படி , மதுரை மாநகராட்சி 14 நடுநிலைப்பள்ளிகள் , மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 20 ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என, மொத்தம் 73 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வரை பயிலும் சுமார் 6511 மாணவ, மாணவிகள் தினந்தோறும் பயன்பெற்று வருகிறார்கள்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 திரௌபதியம்மன் மாநகராட்சி ஆரமப்பள்ளியில் , முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவுகள் வழங்கப்பட்டு வருவதை ஆணையாளர் , ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தினசரி உணவுகளின் பட்டியல், உணவின் தரம், பதிவேடுகள் உள்ளிட்டவற்றை குறித்தும், மாணவ, மாணவிகளிடம் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், வழங்கப்பட்டு வரும் உணவினை ஆணையாளர் , மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா தலைமைப் பொறியாளர் ரூபன் சுரேஷ் நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார் உதவி ஆணையாளர் திருமலை கல்வி அலுவலர் நாகேந்திரன் உதவிப்பொறியாளர் மயிலேறிநாதன் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் , மாநகராட்சி அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!