மதுரையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி: ஆணையர் தொடக்கம்
மதுரை தமிழன்னை சிலை அருகில் தொடங்கிய உலக தலை காயம் விழிப்புணர்வு நாள் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள்
மதுரை தமுக்கம் தமிழ்ன்னை சிலை அருகில் நடைபெற்ற உலக தலை காயம் விழிப்புணர்வு நாள் பேரணியை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.
மதுரை தமுக்கம் தமிழன்னை சிலை அருகே உலக தலை காயம் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆறுமுகசாமி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
நிகழ்வின் தொடக்கத்தில், உலக தலைக்காய விழிப்புணர்வு நாள் பேரணியை ,மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில், சேது பொறியியல் கல்லூரி மாணவர்கள், அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச்சென்றனர். தமுக்கம் தமிழன்னை சிலையில் இருந்து தொடங்கிய பேரணி கோரிப்பாளையம் சிக்னல் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி திருவள்ளுவர் சிலை அருகே பேரணி நிறைவு பெற்றது.
உலக தலைக்காய விழிப்புணர்வு நாள் பற்றி... நம் உடலில் மிகவும் முக்கியமான பகுதி மூளை, மூளையில் விபத்தின் காரணமாக பாதிப்பு ஏற்படும்போது அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகமாக உள்ளது.இந்த உலக தலைக்காய விழிப்புணர்வு நாள், அனுசரிக்கப்பதனால் நாம் தலைக்கு முக்கியமாக மூளைக்கு ஏற்படும் காயங்களை எப்படி குறைப்பது என்று கண்டுபிடித்து, மூளைக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்.
உலகில் ஒவ்வொரு ஆண்டும் 10- 12% மக்கள் தலையில் - மூளையில் காயம் ஏற்படுவதினால் இறக்கிறார்கள். விபத்தின்போது 30- 35% காயங்கள் தலை ஏற்படுகிறது. தலைக் கவசம் அதாவது ஹெல்மட் போடாத காரணத்தால் காயமடைவோர் எண்ணிக்கைதான் அதிகம்.அதாவது 55% தலைக் கவசம் இல்லாததினால் இறப்பவர்கள் இரண்டு மடங்கு அதிகம்.
பலர் மூளையில் ஏற்படும் காயத்தினால் கோமா (உணர்வற்ற- VEGETATIVE) நிலையில் பல வருஷங்கள் இருப்பவர்கள் பலர். அதனால் தலையில் ஏற்படும் சிராய்ப்பு முதல் கொண்டு, பலத்த மூளையின் காயம் எப்படி ஒருவரின் வாழ்க்கையை மாற்றுகிறது என அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சைக்கிள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஆகியவற்றில் செல்லும்போது, சாலையைக் கடப்பவர்கள் மீது இந்த வாகனங்கள் மோதும்போது 50% பேர் தலைக் காயத்தால் பாதிக்கப்படுகிறார்கள். 25% தலைக்காயங்கள் விளையாடும்போதும், நடந்து செல்லும் போது வழுக்கி விழுதல், தரைவிரிப்புகள் தடுக்கி விடுவதாலும் ஏற்படுகிறது.
இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலை கவசம் (Helmet) அணிதல், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிதல், குடிபோதையில் எப்போதும் எந்த ஒரு வாகனத்தையும் ஓட்டக் கூடாது, படிக்கட்டில் ஏறும்போது படிக்கட்டு சுவரைப் பிடித்து நடப்பது, இரு சக்கர, மூன்று சக்கர , நான்கு சக்கர வாகனங்களை சீரான வேகத்தில் செல்ல செய்வது, சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டுவது போன்ற செயல்கள் மூலம் நமது தலையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த நாளின் நோக்கம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu