மதுரையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்

மதுரையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட  ஆட்சியர்
X

 வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர்

மாவட்ட ஊராட்சி- 8 உறுப்பினர் பதவி, மாநகராட்சி நகராட்சி,பேரூராட்சி -10 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது

மாவட்ட திட்டமிடும் குழு ஊறுப்பினர்கள் தேர்தலுக்கு,வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர் பதிவு அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர் வெளியிட்டார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், வாக்காளர் பதிவு அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட திட்டமிடும் குழு ஊறுப்பினர்கள் தேர்தலுக்கு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

மதுரை மாவட்ட, திட்டமிடும் குழுவிற்கு ஊரகப் பகுதி (மாவட்ட ஊராட்சி) - 8 உறுப்பினர் பதவியிடங்களும் மற்றும் நகர்ப்புறப்பகுதி (மாநகராட்சி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்) -10 உறுப்பினர் பதவியிடங்களும் நிர்ணயம் செய்யப்ட்டு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.80 நாள்.07.03.2023-ல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவுரைகளின்படி, நாளது தேதியில் பதவியில் உள்ள மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் வார்டு உறுப்பினர்களை வாக்காளர்களாக கொண்டு தயார் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் 02.05.2023-ல் வாக்காளர்களின் பொதுவான தகவலுக்காக வாக்காளர் பதிவு அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், வெளியிட்டார்.

-உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உறுப்பினர்கள் எண்ணிக்கை- ஊரகப்பகுதி, மாவட்ட ஊராட்சி:1: நகரப்பகுதி: மாநகராட்சி-100-நகராட்சிகள்:78.பேரூராட்சிகள்:144.மொத்தம்345.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கூடுதல் ஆட்சியர் (வ) செ.சரவணன்,தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சீ.ராஜ்மோகன் மற்றும் மாவட்ட ஊராட்சி செயலர் சா.லோகன் உட்பட அரசு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story