மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோரிப்பாளையம் பகுதியிலுள்ள தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:
CM Participated Devar Jayanthi At Madurai
சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
மதுரை கோரிப்பாளையம் பகுதியிலமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவரதுதிருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைசெய்தார். அருகில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்.
. இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி,தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆகியோர் உடனிருந்தனர் மேலும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
அலங்காநல்லூர்:
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு,நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி செயலாளர் சக்கரபாணி தலைமையில் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், ஒன்றியச்செயலாளர் கண்ணதாசன், ஒன்றிய த்தலைவர் திருப்பதி, கல்லணை மூக்கையா, பொருளாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்..
சோழவந்தான் :
மதுரை அருகேசோழவந்தான் பேருந்து நிலையம் முன்பாக உள்ள தேவர் சிலைக்கு, காங்கிரஸ் கமிட்டி சார்பாக முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு, சிறுபான்மை பிரிவு தென் மண்டலத் தலைவர் பாதுஷா தலைமை தாங்கினார்.
வட்டாரத் தலைவர் பழனிவேல், முன்னாள் வட்டாரத் தலைவர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்துப்பாண்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில், கனகராஜ் சேகரன் ரவி சங்கரபாண்டி உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu