வாக்குபதிவு மையங்களில் சிசிடிவி காமிரா: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மனு

வாக்குபதிவு மையங்களில் சிசிடிவி காமிரா: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மனு
X

மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாக்கு பதிவு மையங்களில் சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆட்சியரிடம் மனு காெடுத்தனர்.

உள்ளாட்சி தேர்தல்: வாக்குபதிவு மையங்களில் சிசிடிவி காமிரா பொருத்த வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆட்சியரிடம் மனு.

மதுரை மாவட்டத்தில் நடைபெறும், உள்ளாட்சி தேர்தல்களில், வாக்கு பதிவு மையங்களில் சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும் என, தமிழக முன்னாள் அமைச்சர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் 16- வது வார்டில், மாவட்ட ஊராட்சிக்கு உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக, அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தலில் முறைகேட்டை தடுக்கும் வகையில், வாக்குப் பதிவு மையங்களில், சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும், தேர்தல் நியாயமான முறையில் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரிடம், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயக்குமார், சட்டப் பேரவை உறுப்பினர் ஐயப்பன், வே. ராசன் செல்லப்பா, பெரிய புள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சரவணன், அண்ணாத்துரை, தமிழரசன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பாண்டியன், வாடிப்பட்டி, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கொரியர் கணேசன், மு.காளிதாஸ், தென்கரை ராமலிங்கம், பரவை முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்