மதுரை அருகே கள்ளழகர் கோயிலில் 10 ஆண்டு பிறகு தெப்பத் திருவிழா

மதுரை அருகே கள்ளழகர் கோயிலில் 10 ஆண்டு பிறகு தெப்பத் திருவிழா
X

தெப்பத்தில் எழுந்தருளினார் கள்ளழகர்.

மதுரை அருகே கள்ளழகர் கோயிலில் 10 ஆண்டு பிறகு இன்று தெப்பத் திருவிழா மிக விமரிசையாக நடந்தது.

மதுரை மாவட்டம் அழகர் கோவில் ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு, தெப்ப உற்சவ திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

பத்து ஆண்டுகளுக்குப் பின்பு நீர் நிரம்பிய தெப்பத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகரை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகர்கோவில் ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இதில், உச்ச நிகழ்ச்சிகளாக வைகையாற்றில் சித்திரை பவுர்ணமி அன்று கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியும்,ஆடிமாதம் நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியும்,அதனைத் ,தொடர்ந்து மாசிமாதம் மாசிமகத்தன்று பொய்கைக்கரைப்பட்டி யிலுள்ள தெப்பத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியும் மிகவும் பிரசித்தி பெற்றவை.

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மை காரணமாக தெப்பத்தில் நீர் இல்லாத காரணத்தால் கள்ளழகர் தெப்பக்குளம் கரையோரம் சுற்றிவந்து தெப்பத்திருவிழா நடைபெற்றது.

ஆனால் ,கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக 15 அடி ஆழமுள்ள தெப்பம் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, இன்று மாசி மகத்தை முன்னிட்டு கள்ளழகர் ஸ்ரீதேவி பூதேவியருடன் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் தெப்பத்தில் எழுந்தருளி முட்டுசாத்துதல் எனும் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு, தெப்பக்குளத்திற்குள் அழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.

பாரம்பரிய வழக்கப்படி, சிறுவர்கள் சிலம்பம் ஆடி மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கள்ளழகர், பின்னர் அன்ன வாகனத்தில் தெப்பக்குளத்தில் எழுந்தருளினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil