சோழவந்தான் அருகே குடும்பத்துடன் வாக்கு சேகரித்த பாஜக மாநில நிர்வாகி:

சோழவந்தான் அருகே குடும்பத்துடன் வாக்கு சேகரித்த பாஜக மாநில நிர்வாகி:
X

 சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு வேட்பாளர் தொழிலதிபர்மணி முத்தையா குடும்பத்துடன் சேர்ந்துதீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் 

சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு வேட்பாளர் தொழிலதிபர்மணி முத்தையா குடும்பத்துடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு வேட்பாளர் தொழிலதிபர்மணி முத்தையா குடும்பத்துடன் சேர்ந்துதீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று 98 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்களது வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சோழவந்தான் பேரூராட்சி 3 வது வார்டு பசும்பொன் நகர் பகுதியில் தமிழக பாஜக சார்பில் போட்டியிடும் தொழிலதிபர் மணி முத்தையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாடிப்பட்டி ரோடு, எம்.வி.எம் பள்ளி அருகில், பாலமுருகன் நகர் ,வைகை நகர் ,கல்கி நகர், மோகன் பிளாட், அண்ணாமலை நகர் ,ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடன் சோழவந்தான் 5.வது வார்டு பாஜக வேட்பாளர் சிவகாமி லிங்கம்,13வது வார்டு சுயேச்சை வேட்பாளர் எம் வள்ளிமயில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் இருந்தனர். தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தொழிலதிபர் மணிமுத்து அவர்களுக்கு பசும்பொன் பகுதி முழுவதும் பொதுமக்கள் திரளாக இருந்து வரவேற்பு கொடுத்தனர்

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!