மதுரையில் பாஜக நிர்வாகி எச். ராஜா கைது!

மதுரையில் பாஜக நிர்வாகி எச். ராஜா கைது!
X
பாஜக மூத்த தலைவர் மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கும் போதே, அவர் பின்னால் நின்று கொண்டிருந்த பாஜக கட்சியினரை காவல்துறையினர் தாக்கியதால் பரபரப்பு

மதுரையில் எச் ராஜா கைது.

மதுரை:

கள்ளக்குறிச்சி உயிர்பலி சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்காத, திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்த காவல்துறையினர்.:

பாஜக மூத்த தலைவர் மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கும் போதே, அவர் பின்னால் நின்று கொண்டிருந்த பாஜக கட்சியினரை காவல்துறையினர் தாக்கியதால் பரபரப்பு.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் பலியாகி உள்ளனர். திமுக தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையை தடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக கூறி தமிழக அரசை கண்டித்து இன்று பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் பாஜக சார்பில் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், அவர் வருவதற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்ய தொடங்கினர்.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ட்ரக்சரை கொண்டு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர், அவர்களிடம் இருந்து ஸ்ட்ரக்சரை பிடுங்கி சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர், அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் எச் ராஜா வருவதற்கு முன் அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என தெரிவித்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது போராட்ட இடத்திற்கு வந்த எச் ராஜா கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலை தடுமாற்றம் கொண்டுள்ளது.

இதற்கு பொறுப்பேற்காத திமுக அரசு, நாங்கள் அமைதியான முறையில் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் எனக் கூறி முழக்கம் இட தொடங்கினார். உடனடியாக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பாஜக எச் ராஜா பேட்டி கொடுத்திருக்கும்போதே அவர் பின்னால் நின்று கொண்டிருந்த பாஜகவினரை காவல்துறையினர் தாக்குவதாக பாஜக கட்சியினர் கூச்சலிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!