மதுரையில் மேற்கு வங்காள முதலமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டம்

மதுரையில் மேற்கு வங்காள முதலமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டம்
X

பைல் படம்

மம்தா பானர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கட்சித் தொண்டர்கள் மக்களுக்கு முகக் கவசம் மற்றும் இனிப்பு வழங்கினர்

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கட்சித் தொண்டர்கள் பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் இனிப்பு வழங்கினர்.

மேற்கு வங்க முதல்வரும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் 67 -வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் அவர் பிறந்த நாள் கொண்டாட்டம், தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அதேபோல், மதுரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் கல்யாண் குமார், தலைமையில் மாநில பொறுப்பாளர் பிரேம் குமார் மற்றும் மாவட்ட செயலாளர் தர்மா ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. தற்போது, மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதனால், பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கினர்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள், குழந்தைகளுக்கான மேற்கு வங்காளம் முதலமைச்சரின் மம்தா பானர்ஜி அவர் உருவம் பொறித்த பலூன் உள்ளிட்ட பொருட்களை வழங்கி, . இந்நிகழ்வில், மதுரை மாவட்ட நிர்வாகிகள் பவா பாண்டி . இப்ராம்ஷா ராஜா.கலையரன் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story