மதுரையில் வங்கியில் திடீர் தீ விபத்து: விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு

மதுரையில் உள்ள தனியார் வங்கியில் நேரிட்ட திடீர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்
வங்கியில் திடீர் தீ விபத்து துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மதுரை ஆரப்பாளையம், ஞானஒளிபுரம் பகுதியில் கரூர் வைஸ்யா வங்கி செயல்பட்டு வருகிறது. இதில், தரைதளத்தில் வங்கியும் முதல் தளத்தில் மண்டல அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மண்டல அலுவலகத்தில்,உள்ள குளிர்சாதன பெட்டியில் புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக, வங்கி ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவலறிந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு உள்ளே சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் ஏசி சேர்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமானது. துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால், வங்கியில் உள்ள மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. நல்வாய்ப்பாக ஊழியர்கள் அனைவரும் வெளியேறியதால் யாருக்கும் பாதிக்கப்படவில்லை. இச்சம்பவம் குறித்து, கரிமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu