மதுரை மாநகராட்சி பகுதிகளில் வரும் 4ம் தேதி இறைச்சி விற்பனைக்குத் தடை
மதுரை மாநகராட்சி.
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசின் அரசாணை (ஊரக வளர்ச்சி துறை) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரும் 4ம் தேதி அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
ஆடு, மாடு, கோழி மற்றும் இதர உயிரினங்கள் உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. இறைச்சி விற்பனை கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. தடையை மீறி செயல்படுவர்களின் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதாரச்சட்டம் 1939ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இதேபோல, மதுரை மாவட்டத்தில், பேரூராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சி பகுதிகளில், இறைச்சி மற்றும் மதுபானங்கள் ஆகியவை அன்றைய தினம் விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், மதுரை மாநகரில் சில இடங்களில், இறைச்சிகள் கடைகளில் விற்காமல், வீடுகளில் ரகசியமாக விற்பனை செய்வதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனராம்.
மதுரை அண்ணாநகர் கோமதிபுரம் ஜீப்பிலி டவுன் பகுதியில், சில வீடுகளில், ரகசியமாக விற்கப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது.
ஆகவே, மதுரை மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகம், விதியை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu