மதுரையில் ஏப். 14-ம் தேதி இறைச்சி விற்க தடை: மாநகராட்சி அறிவிப்பு

மதுரையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இம் மாதம் 14-ம் தேதி இறைச்சி விற்க மாநகராட்சி தடை விதித்துள்ளது

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, இம் மாதம் 14.04.2022 (வியாழக்கிழமை) அன்று ஆடு, மாடு, பன்றி, இறைச்சிகள் போன்ற விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது கூடாது. மேற்கண்ட கடைகளையும் திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்கள் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதாரப்பிரிவு சட்டம் 1939ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்