தமிழகத்தில் மாற்றம் நிகழ விழிப்புணர்வு தேவை - நடிகர் கமல்ஹாசன்

தமிழகத்தில் மாற்றம் நிகழ விழிப்புணர்வு தேவை - நடிகர் கமல்ஹாசன்
X

மதுரையில் மக்கள் நீதி மைய வேட்பாளர்களை ஆதரித்து மநீம தலைவரும், நடிகருமான கமலஹாசன் வாக்கு சேகரித்தார்.

மதுரையில் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர்களை ஆதரித்து மநீம தலைவரும், நடிகருமான கமலஹாசன் வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் நல்ல மாற்றம் நிகழ உங்கள் வாய்ப்பை பயன்படுத்துங்கள்: கமலஹாசன்:

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சிகளில் நல்ல மாற்றம் நிகழவதற்கு வாக்காளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என, மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் பேசினார்.

மதுரை அண்ணாநகர், சுகுணா ஸ்டோர் அருகே, மதுரை மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர்களை, அவர் ஆதரித்து டார்சு லைட் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு, அவர் பேசியது:

மக்கள் நீதி மைய வேட்பாளர்களை நீங்கள் தேர்ந்து எடுத்தால், வெளிபடையான நிர்வாகம் நடைபெறுவதுடன், தவறும் செய்யும் உறுப்பினர்கள் மீதும், நான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.

அரசு சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால், பொது மக்களின் விழிப்புணர்வு தேவை. மக்கள் விரும்பும் மாற்றம் நிகழ்ந்தால், நாடு நலம் பெறும். மாற்றத்தை உள்ளாட்சிகளில் கொண்டு வருவதற்கு, வாக்காளர்கள் அனைவரும் டார்சு லைட்டுக்கு வாக்களிக்க கமலஹாசன் கேட்டுக் கொண்டார்.

அவர், மதுரை அண்ணாநகர் முத்துராமன், கீதா நீலராமன், ஜெயக்குமார், சீனிவாசன் உள்ளிட்ட மக்கள் நீதி மைய வேட்பாளர்களை, பொது மக்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!