மாணவர்கள் மரம் வளர்க்க விழிப்புணர்வு: விதைப்பந்து வழங்கிய மதுரை மேயர்

மாணவர்கள் மரம் வளர்க்க விழிப்புணர்வு:  விதைப்பந்து வழங்கிய மதுரை மேயர்
X

மதுரையில், மரம் வளர்க்க  மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய  மேயர் இந்திரணி.

மாணவர்கள் அனைவரும் மரங்களை வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும் என மேயர் இந்திராணி பொன்வசந்த் குறிப்பிட்டார்

பள்ளி மாணவர்களிடையே மரம் வளர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மதுரையில் 10 லட்சம் விதை பந்துகள் வழங்கும் திட்டத்தினை மேயர் தொடக்கி வைத்தார்:

மதுரை தெற்கு வாசல் நாடார் வித்யாசாலை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் பேசுகையில், மரங்கள் நமக்கு வாழ்க்கையின் அத்தியாவசியமான உணவு மற்றும் ஆக்ஸிஜனை வழங்குகின்றன. அவர்கள் தங்குமிடம், மருந்து மற்றும் கருவிகள் போன்ற கூடுதல் தேவைகளை வழங்கினர். அவை கார்பனை சேமித்து, மண்ணை நிலைப்படுத்தி உலக வனவிலங்குகளுக்கு உயிர் கொடுக்கின்றன. இன்று, அவற்றின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மேலும் நமது நவீன வாழ்க்கை முறைகளால் உருவாக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய அவற்றின் பங்கு விரிவடைவதால் மரங்களின் அதிக நன்மைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

வீட்டில் மரம் வளர்ப்பதினால் நிறைய இயற்கை நன்மைகள் அடங்கியுள்ளது. இப்போது இருக்கின்ற காலத்தில் மரங்கள் வளர்ப்பது எல்லாம் மிகவும் அரிதாக மாறிவிட்டது. இயற்கை இடம் எல்லாம் நிலங்களாக மாறிவிட்டது. ஒவ்வொரு மரத்திலும் ஏராளமான இயற்கை குணங்கள் நிரம்பியுள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் மரங்களை வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும் என குறிப்பிட்டார்.

தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், பதக்கங்களையும் வழங்கினர்.

தொடர்ந்து, மாணவர்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், அதிகமாக மரங்களை வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குளோபல் விதைபந்து முகாம் மூலம் 10 லட்சம் விதைப்பந்துகள் வழங்கும் திட்டத்தினை, மாநகராட்சி மேயர் இந்திராணி மாணவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார். தொடர்ந்து, அனைவருக்கும் விதைபந்துகள் வழங்கப்பட்டது.

இந்த அமைப்பின் மூலம் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு 10 லட்சம் விதைப்பந்துகள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்