மதுரை அருகே குடிநீர் பரிசோதனை குறித்த விழிப்புணர்வு முகாம்
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்ற குடிநீர் பரிசோதணை மற்றும் விழிப்புணர்வு முகாம்.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, கிராமப்புற பெண்கள் சுகாதாரக் குழுக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு களநீர் பரிசோதனை பெட்டிஎப்.டி.கே பயன்படுத்துதல் மற்றும் வலைத்தளத்தில் பதிவிடும் பயிற்சி வகுப்பு நடந்தது.
இந்த பயிற்சி வகுப்பிற்கு, கிராம குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் செந்தில்குமரன் தலைமை வகித்தார்.ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பா.வீரராகவன் முகாமை தொடக்கி வைத்தார்.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் உலகநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் கருத்த பாண்டியன், பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் ஆகியோர் பேசினர். இதில் ,மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 29 கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் பம்ப் ஆபரேட்டர்களுக்கு நீரின் தன்மைகள் குறித்து செய் முறைகள் மூலமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் பரிசோதனையாளர் விளக்கி கூறினார்.
இதன் ஏற்பாடுகளை, ஜூபிடர் பெண்கள் கூட்டமைப்பு பெட்கிராட் நிர்வாகிகள் அங்குசாமி, சாரள் ரூபி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் செய்திருந்தனர்.பெட்கிரட் பொருளாளர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu