மதுரையில் சாலை விதிகளை கடைபிடிக்க ஆட்டோ டிரைவர்கள் முன்வரவேண்டும்

மதுரையில் தவறான பாதையில் சென்ற ஆட்டோ காரின் முன்பக்கம் மோதியதில், ஆட்டோவில் பயணித்த 5 பேர் படுகாயம் காவல்துறை விசாரணை
மதுரையில் தவறான பாதையில் சென்ற ஆட்டோ காரின் முன்பக்கம் மோதியதில், ஆட்டோவில் பயணித்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை சிம்மக்கல் பகுதியில், இருந்து காளவாசல் நோக்கி செல்லும் பகுதியில் மதுரை மத்திய சிறைச்சாலை உள்ளது. சிறைச்சாலையை ஒட்டி உள்ள புதுஜெயில் பிரதான சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர்.
மேலும், மிகவும் பரபரப்பாக காணப்படும் புது ஜெயில் சாலையில் ஆட்டோ ஓட்டுநர் சேகர் தனது ஆட்டோவில் காதணி விழாவிற்காக அழைப்பிதழ் கொடுக்க சென்ற இரண்டு பெண்கள், ஒரு சிறுமி, மூதாட்டி என நான்கு பேரை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அரசரடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் கேஸ் நிரப்பி விட்டு சிம்மக்கல் நோக்கி சென்ற ஆட்டோ ஒரு வழிப் பாதையில் சென்றதால், எதிரே வந்த கார் மீது மோதியதில், ஆட்டோவில் பயணித்த பெண் மற்றும் சிறுமிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் ஆட்டோ ஓட்டுநருக்கு தலையிலும், மூதாட்டி, பெண்கள் என படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் சீட்பெல்ட் அணிந்திருந்தார். ஏர்பேக் வெளியாகி உயிர் தப்பினார். மேலும், ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் இருந்தாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து, கரிமேடு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோவை தவறான பாதையில் இயக்கியதோடு காரில் மோதி அனைவரும் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை நகரைப் பொறுத்தமட்டில், பெரும்பாலான ஆட்டோக்கள் சாலை விதிகளை கடைப்பிடிப்பதில்லையாம். மேலும், ஆட்டோக்களில் பத்துக்கும் மேற்பட்ட வரை ஏற்றிக் கொண்டு ஆபத்தான பயணத்தை மேற் கொள்கின்றனர் என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில் போலீஸார், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாத வரை பாய்ந்து பிடிக்கின்றனர். இதே போன்று, சட்ட விதிகளை மீறும் ஆட்டோக்களை பிடிக்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
ஆகவே ,சாலை விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கின்றனர். மேலும் ,விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது, வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் ,விதியை மீறும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் பயணிகள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu