மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஆக.29 ல்மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஆக.29 ல்மக்கள் குறைதீர்க்கும் முகாம்
X

மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த்

எதிர்வரும் 29.08.2023 (செவ்வாய்கிழமை) மேலமாரட் வீதியில் உள்ள மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் நடைபெறுகிறது

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், ஆக. 29-ல் மக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்மேயர் இந்திராணி பொன்வசந்த்தலைமையில் நடைபெற உள்ளது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில், உள்ளபொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில், குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி எதிர்வரும் 29.08.2023 (செவ்வாய்கிழமை) மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் , மேயர் , தலைமையில் நடைபெற உள்ளது. மண்டலம் 3 (மத்தியம்) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.50 தமிழ்ச்சங்கம் ரோடு, வார்டு எண்.51 கிருஷ்ணன்கோவில் தெரு, வார்டு 52 ஜடாமுனி கோவில் தெரு, வார்டு எண்.54 காஜிமார் தெரு, வார்டு எண்.55 கிருஷ்ணராயர் தெப்பக்குளம், வார்டு எண்.56 ஞானஒளிவுபுரம்,

வார்டு எண்.57 ஆரப்பாளையம், வார்டு எண்.58 மேலப்பொன்னகரம் , வார்டு எண்.59 ரயில்வே காலனி, வார்டு எண்.60 எல்லீஸ் நகர் , வார்டு எண்.61 எஸ்.எஸ்.காலனி, வார்டு எண்.62 அரசரடி, வார்டு எண்.67 விராட்டிபத்து, வார்டு எண்.68 பொன்மேனி, வார்டு எண்.69 சொக்கலிங்கநகர், வார்டு எண்.70 துரைச்சாமி நகர், வார்டு எண்.75 சுந்தரராஜபுரம், வார்டு எண்.76 மேலவாசல், வார்டு எண்.77 சுப்பிரமணியபுரம் ஆகிய வார்டு பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

இந்த குறைதீர்க்கும் முகாமில், பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம்,புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!