மதுரையில் அட்சய பாத்திர கிச்சன் தொடக்க விழா

மதுரையில் அட்சய பாத்திர கிச்சன் தொடக்க விழா
X

மதுரையின் அட்சய பாத்திரம் கிச்சனை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது.

மதுரையின், அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பாக வறியோருக்கு தினமும் மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கான கிச்சன் தொடக்க விழா நடைபெற்றது.

மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் என்கிற அமைப்பு தொடங்கப் பெற்று கடந்த 340 நாட்களுக்கும் மேலாக ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை, வெளியில் உணவு வாங்கி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் அமைப்பிற்காக தனியாக, மதுரை எஸ் எஸ் காலனி எண் 13 பொன்மேனி நாராயணன் ரோட்டில் கிச்சன் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் புதூர் .வி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருநகர் விநாயகர் கோவில் தலைவரும் சமூக சேவகருமான வ. சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சங்குமணி, டாக்டர் சுஜாதா சங்குமணி ஆகியோர் குத்துவிளக்கேற்றி மதுரையின் அட்சய பாத்திரம் கிச்சனை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், கனரா வங்கி முன்னாள் துணை பொது மேலாளர் மீனாட்சிசுந்தரம், லதா ராமகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை, மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சேர்மன் நெல்லை பாலு வரவேற்று பேசினார்.

Tags

Next Story