மதுரையில் வெப்பத்தை தணித்த மழை

மதுரையில் வெப்பத்தை தணித்த மழை
X
மதுரையில் பலத்த மழை, கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து கடுமையான வெயில் காரணமாக சாலையில் நடமாடிய பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த நிலையில், மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலையில் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்து பின்னர் மதியம் 2 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது .

அதன் பின்னர், சாரல் மழையை ஆரம்பித்து நேரம் செல்லச் செல்ல அது பலத்த மழையாக பெய்து சுமார் இரண்டு மணி நேரம் மழை பெய்து வருகிறது. மதுரை பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மதுரை மாநகராட்சி பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழையும், அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் லேசான மழை பெய்து தொடர்ந்து பெய்தது. அவ்வப்போது ,சாரல் மழை பெய்து வருகிறது

இதனால் ,கோடை வெப்பம் தணிந்தது இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலையில் சென்றவர்கள் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர் .

மதுரையில் நீண்ட நாளுக்கு பிறகு ,மழை பெய்ததால் பொதுமக்கள் கோடை வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
future of ai in retail