மதுரையில் ஒரு மாதத்தில் 15 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

மதுரையில் ஒரு மாதத்தில் 15 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
X

மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா

மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவின் உத்தரவின்பேரில், ஒரே மாதத்தில் 15 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க, மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரிடம் நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கப்பட்டது.

அதனையும் மீறி, தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக, கடந்த ஒரு மாதத்தில் 15 ரவுடிகள் உட்பட, 2021 ஆம் வருடத்தில் 72 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பெருமளவில் குற்றச் சம்பவங்கள் தடுக்கப்படும்; பொதுமக்களின் நலனுக்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!