சோழவந்தான் அருகே கிராம சபைக் கூட்டத்தில், வாக்குவாதம்.

சோழவந்தான் அருகே கிராம சபைக் கூட்டத்தில், வாக்குவாதம்.
சோழவந்தான் அருகே கிராம சபைக் கூட்டத்தில், வாக்குவாதம் நடைபெற்றது.

கிராம சபைக் கூட்டத்தில் வாக்குவாதம்.

சோழவந்தான்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, கருப்பட்டி கிராமசபை கூட்டத்தில் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என, பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக் குட்பட்ட வாடிப்பட்டி தாலுகாவில், கருப்பட்டி ஊராட்சியில் கடந்த 8 மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளிகளுக்கு பணிகள் வழங்கப்படவில்லை என, நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சிமன்றத்தலைவர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.அந்த வகையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்டகருப்பட்டி ஊராட்சியில், ஊராட்சிமன்றத் தலைவர், ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில்,கிராம சபை கூட்டம் நடைபெற்றது .

இதில், தங்களது ஊராட்சியில் கடந்த எட்டு மாதங்களாக 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பயனாளிகளுக்கு,

பணிகள் வழங்கப்படவில்லை என்றும், குறிப்பிட்ட முதன்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே 10 முதல் 20 நபர்கள் வரை 100 நாள் வேலை வழங்கப்படுகிறது என்றும்,இதற்கு காரணம் பணித்தள பொறுப்பாளர் 100 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும் ஆனால், தங்களது வேலை திட்ட பணி பொறுப்பாளர் கடந்த நான்கு வருடங்களாக மாற்றாமல் இருப்பதால்,இது போன்ற தவறுகள் நடைபெறுவதாக, இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அடுக்

கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.இதற்கு அரசு நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் 100 நாள் வேலை திட்ட பணிகளை அந்தந்த பணியாளர்களுக்கு சமமாக பிரித்து வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story