கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை: அமைச்சர்கள் வழங்கல்

கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன்
மதுரை மாவட்டம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு மற்றும் பணியின்போது உயிரிழந்தோரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும்நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் (20.10.2021) வழங்கினார்கள்.
மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு சுயதொழில் மற்றும் திறன் மேம்பாட்டு ஆலோசனை மையம் திறந்து வைக்கப்பட்டது. இம்மையம் சென்னையை சார்ந்த வீ ஆர் யுவர் வாய்ஸ் என்ற தொண்டு நிறுவனம் மூலமாக டி.வி.எஸ் மதுரை நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியிலிருந்து செயல்படுத்தப்படுகிறது. இம்மையத்தின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு சுயதொழில் புரிவதற்கான ஆலோசனைகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் போன்ற உதவிகள் அளிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இந்த சிறப்பு ஆலோசனை மையம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்புகளைக் கண்டறிய உதவுவதோடு அவர்களுக்கு சுய தொழில் மற்றும் திறன் மேம்பாட்டிற்கும் வழிகாட்டும் வகையில் ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 6 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளையும், பணியின் போது, உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் 9 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளையும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமையினால் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் 7 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளையும், வருவாய்த்துறையின் சார்பில் பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளையும், அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள சட்டமன்ற உறுப்பினர்கள்
கோ.தளபதி (மதுரை வடக்கு) ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், தலைமை பொறியாளர் கே.உமாதேவி மேற்பார்வை பொறியாளர்கள் .எஸ்.வெண்ணிலா மங்களநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu