மதுரை மீனாட்சியம்மன் கோயில், சைவ பயிற்சிக்கு விண்ணப்பங்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில், சைவ பயிற்சிக்கு விண்ணப்பங்கள்
X

மீனாட்சி அம்மன் கோவில் 

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சைவ ஓராண்டு சான்றிதழ் பயிற்சி படிப்புக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்தொடர்ச்சியாக, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சைவ ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்து சைவ கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு, சீருடை, உறைவிடம், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3000- உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை www.maduraimeenakshi.org என்ற திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags

Next Story