பாஜகவை தோற்கடிக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: எஸ்.டி.பி.ஐ.
![பாஜகவை தோற்கடிக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. பாஜகவை தோற்கடிக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: எஸ்.டி.பி.ஐ.](https://www.nativenews.in/h-upload/2023/02/26/1668457-img-20230226-wa0020.webp)
கூட்டத்தில் எஸ். டி. பி. ஐ. கட்சியின் தேசியத் தலைவர் பைஜி
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக அரங்கத்தில், எஸ். டி .பி. ஐ .கட்சியின் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், எஸ். டி. பி. ஐ .கட்சியின் தேசியத்தலைவர் ஃபைஜி தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் முன்னிலை வைத்தார்.
இந்த கூட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் ஃபைஜி செய்தியாளர்களிடம் பேசும்போது:மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சியை கைப்பற்றிய போது, கருப்பு பணத்தை ஒழிப்போம் என கூறி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. இது ஜனநாயக அடிப்படையில் செயல்படக்கூடிய ஜனநாயகத்தின் குரல் வலையை நெரிக்கும் செயலாக நாங்கள் பார்க்கிறோம். இந்திய நாட்டின் அரசியல் ஜனநாயகத்தை அழிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பிய காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம். அதானியின் பிரச்னை பற்றி தற்போது வரை நாடாளுமன்றத்தில் வாய் திறக்காத நபராக மோடி இருக்கிறார். வரவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக மக்கள் விரோத சக்தியை வீழ்த்த வேண்டும். பிபிசி ஆவணப்பட விவகாரத்தில் அனைத்து ஊடகவியலாளர்களும் ஒன்று சேர வேண்டும்.பத்திரிகை நண்பர்களுக்கு எஸ்டிபிஐ கட்சி என்றும் ஆதரவாக இருக்கும். சிறிய கட்சி,பெரிய கட்சி என்று பாகுபாடு பார்க்காமல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசும்போது:அண்மையில் ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் பாஜக அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.அப்போது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்ணன் பாண்டியன் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுட தெரிந்தவர்கள். வெடிகுண்டு வைக்க தெரிந்தவர்கள். இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம் என்று பேசினார்.
பாஜகவின் இது போன்ற வன்முறை வெடிகுண்டு கலாசாரத்தை காவல்துறையினர் தடுத்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை, அவர்களை காவல்துறை கைது செய்யவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையி னரால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
தமிழக மீனவர்களின் உயிர்கள் சிதைக்கப்பட்டு வருகிறது. தரங்கம்பாடி மீனவர்கள் ஆறு பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சிறப்பு கடற் படையை உருவாக்கிய தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில,மாவட்ட அளவிலான தலைவர்கள் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu