மதுரை மாநகராட்சி பள்ளியில் ,மாணவர் சேர்க்கை திருவிழா!

மதுரை மாநகராட்சி பள்ளியில் ,மாணவர் சேர்க்கை திருவிழா!
X
மதுரை மாநகராட்சி பள்ளியில், மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மதுரை அரசு மதுரை மாநகராட்சி அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை திருவிழா !

மதுரை.

மதுரை மாநகராட்சி தல்லாகுளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், மாநகராட்சி 31 வது வார்டு கவுன்சிலர் முருகன் தலைமையில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியை ரூபி முன்னிலை வகித்தார். பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவிகளை கற்கண்டு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

ஆசிரியர் பயிற்றுனர் சமூக ஆர்வலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தகங்கள், நோட்டுகள், பயிற்சி ஏடுகள், எழுது பொருள்கள் வழங்கப்பட்டது. மாணவர் சேர்க்கைக்கான திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. சமூக ஆர்வலர் யதுகுலஜோதி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர். இந்நிலையில், பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் வாகனங்களால் மதுரை பகுதிகளில் உள்ள சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!