மதுரை கல்லூரி மாணவர்கள் சார்பில் ஆதார் அட்டை விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

மதுரை கல்லூரி மாணவர்கள் சார்பில் ஆதார் அட்டை விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
X

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மாணவர்களால் ஆதார், சான்றிதழ் வழங்கும் விழா:

மதுரை:

மதுரை தத்தனேரி வட்டாரப் பகுதிகளில், குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பொதுமக்களுக்கு, ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண் அவசியம் தேவை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நிரல் சமூக நலத்துறை நிர்வாகி (ஒன் ஸ்டாப் சென்டர்) டயானா புனிதவதி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அமெரிக்கன் கல்லூரி சமூக பணித் துறை மாணவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து, இணையதளத்தின் மூலம் இலவசமாக ஆதார் அட்டைகள், பேன் கார்ட், சாதிச் சான்றிதழ் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட இ-சேவை வழியாக வழங்கினார்கள்.

மேலும், சமூக பணியைச் சார்ந்த அமெரிக்கன் கல்லூரி உதவி பேராசிரியர் ஜான் சாலமோன் மற்றும் மதுரை சம பராமரிப்பு அறக்கட்டளையுடன் (எம்.இ.சி.எஃப்) ஆகியோர், மதுரை சக்கிமங்கலம் அருகே உள்ள எல்.கே.பி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளியில் பயிலும் முறைகள் கல்வி கற்பதற்கான வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்கள்.

இம்முகாமினை, (எஸ்.எல்.பி.என்.எஸ்) பெண்கள் நலச் சங்கத்தினர், அமெரிக்கன் கல்லூரி சமூக பணி மாணவர்கள் மகேஸ்வரர், கிருஷ்ண வேணி, பாலமுருகன், தீப் படேல், கேசவ மூர்த்தி, முத்து மணி, ஸ்ரீமதி மற்றும் விஜய் தர்ஷன் ஆகியோர் ஒருங்கிணைத்து, சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !