/* */

மதுரை யானைமலை ஒத்தக்கடையில் நடிகர் அஜித் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

மதுரை யானைமலை ஒத்தக்கடையில் நடிகர் அஜித் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

மதுரை யானைமலை ஒத்தக்கடையில் நடிகர் அஜித் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

மதுரை யானைமலை ஒத்தக்கடையில் நடிகர் பிறந்த நாள் விழாவை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

மதுரையில் நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாள் விழாவை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினர்.

நடிகர் அஜித்குமார் 53 வது பிறந்த நாள் விழாவை நேற்று அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடினார்கள். தல ரசிகர்களின் இந்த விழாக்கள் தமிழகம் களை கட்டியது. மேலும் அவரது பிறந்த நாளில் நேற்று வெளியான ௩ படங்களையும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

அந்த வகையில் மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள சுதந்திர நகர் 3 வது தெருவில், மே உழைப்பாளர் தினம் மற்றும் நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்விஎம் மெட்டல் ஏ.கே. நண்பர்கள் சார்பில் 3 ம் ஆண்டு அன்னதானம் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். மேலும், மே.1 ம் தேதி நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி மகிழ்ச்சி பெற்றனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஆர்.வி.எம். மெட்டல் ஏ.கே. நண்பர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 May 2024 6:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்