மதுரை அருகே பழுதடைந்த காரில் படுத்திருந்தவர் உயிரிழப்பு

மதுரை அருகே பழுதடைந்த காரில் படுத்திருந்தவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு பழுதான காரில் மதுபோதையில் படுத்திருந்ததாக கூறப்படுகிறது

மதுபோதையில் பழுதாகி நின்று இருந்த வாகனத்தில் படுத்திருந்த வாலிபர் உயிரிழந்தார்.:

மதுரை கோச்சடை மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள வேல்முருகன் பஞ்சர் கடை செயல்பட்டுவருகிறது. கடை முன்பாக நான்கு வருடங்களுக்கு முன் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்று உள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காமக்காபட்டி சேர்ந்த பாபு (40.) . திருமணமாகாத, இவருக்கு வீடு எதுவும் கிடையாது. மதுரையில் கிடைக்கும் வேலையை பார்த்து விட்டு ஹோட்டலில் சாப்பிட்டு வாழ்க்கையை கழித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு பழுதான காரில் படுத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காரில் இருந்து துர்நாற்றம் வீசவே அருகில் உள்ளவர்கள் பழுதான வாகனத்தை சோதித்தபோது, அழுகிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து அங்கு வந்த மதுரை எஸ். எஸ். காலனி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs