திருமங்கலம் அருகே 30 நாளில் அப்பளம் போல் மாறிய புதிய தார் சாலை

திருமங்கலம் அருகே 30 நாளில் அப்பளம் போல் மாறிய புதிய தார் சாலை
X

திருமங்கலம் அருகே தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையை மக்கள் கையில் பெயர்த்து எடுத்து காண்பித்தனர்.

Public Protest - மதுரை திருமங்கலம் அருகே 30 நாளில் அப்பளம் போல் புதிய தார் சாலை மாறி விட்டதாக மக்கள் புகார் கூறி உள்ளனர்.

Public Protest - மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்து கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எஸ். வெள்ளாகுளம் கிராமத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு , ரூ. 71 லட்சம் செலவில் கிராமத்தில் உள்ள மயானத்தில் இருந்து எஸ் .கல்லுப்பட்டி வரை 1.400 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார் சாலை போடப்பட்டு , ஒரு மாதத்திற்குள் அப்பளம் போல் தார் சாலைகளை கிராம மக்கள் கையில் பெயர்த்தெடுத்து காண்பிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.

மேலும் ,இப்பணிகள் 2019-20 ஆண்டு வரை உள்ள திட்ட பணிகளுக்கான வேலை என்பதை, அப்பணிகளை கடந்த ஒரு மாதத்திற்குள் முடித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணி நிறைவு செய்துள்ளதாக விளம்பர பலகையில் வைத்துள்ளது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரூ. 71 லட்சம் செலவில் போடப்பட்ட தார் சாலை அப்பளம் போல் பெயர்த்திடும் அளவிற்கு உள்ளதை அறிந்த கிராம மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து , தங்களுடைய கிராமத்திற்கு தரமான புதிய சாலை அமைக்க வேண்டி கேட்டுக் கொண்டனர்.இல்லை என்றால், கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்