மதுரை மத்திய சிறைச்சாலை அருகே குப்பையில் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு

மதுரை மத்திய சிறைச்சாலை அருகே குப்பையில் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு
X

மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் கிடந்த துப்பாக்கி.

மதுரை மத்திய சிறைச்சாலை அருகே குப்பையில் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மத்திய சிறைச்சாலை வாசல் அருகே அமைந்திருந்த குப்பை தொட்டியில், இன்று வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

அப்போது அந்த குப்பை தொட்டியில் சிறிய அளவிலான கையடக்க ஏர்கன் இருந்துள்ளது. இதனால் ,அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் துப்பாக்கி குப்பை தொட்டிகள் கிடப்பதே குறித்து கரிமேடு காவல் நிலையத்திற்கு சிறை நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்ததில் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, கையடக்க ஏர்கன் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து இருப்பதால் ,யாரேனும் குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!