மதுரை அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

மதுரை அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி.

மதுரை அருகே 5 டன் ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அருகே விரகனூர் தேசிய நெடுஞ்சாலை ஈச்சசேனரி பேருந்து நிறுத்தத்தில், போலீசார் வாகன சோதனையில் இருந்த போது,அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி மூடைகள் 4 டன்னும் கோதுமை 1டன்னும் இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, ரேஷன் அரிசியை கடத்தி வந்த மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த ஓட்டுனர் ரகு மற்றும் சோவியத் ஆகிய இருவரையும் கைது செய்த குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 5 டன் அரிசி மற்றும் அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தை பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!