போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 21 சவரன் நகை மோசடி: போலீசார் விசாரணை

போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 21 சவரன் நகை மோசடி: போலீசார் விசாரணை
X
மதுரை காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த பெண்ணிடம் போலீஸ் எனக்கூறி 21 பவுன் நகையை ஏமாற்றி எடுத்துச் சென்றனர்

மதுரை காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வி(54) . இவர் உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று திரும்பி வரும்பொழுது முனிச்சாலை பகுதியில் வழி மறித்த மர்ம நபர் போலீஸ் எனக்கூறி அவர் அணிந்திருந்த 21 சவரன் நகையை பாதுகாக்க பேப்பரில் மடித்து வீட்டிற்கு எடுத்துச் செல்லும்படி கூறி அனுப்பி வைத்தார். வீட்டுக்கு சென்ற மூதாட்டி பேப்பரை பிரித்து பார்த்த போது, நகைக்குப் பதிலாக கல் இருந்ததாம். நூதன முறையில் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து தெப்பக்குளம காவல் நிலையத்தில் செல்வி அளித்த புகாரைத் தொடர்ந்து, நூதனமுறையில் ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai healthcare products