மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 206 மனுக்கள்

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 206 மனுக்கள்
X

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 206 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக 206 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து ஆணையாளர், நேரடியாக பெறப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒவ்வொன்றையும், கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.

இம்முகாமில், உதவி ஆணையாளர் அமிர்தலிங்கம், நகரப்பொறியாளர் (பொ) சுகந்தி, செயற்பொறியாளர் கருத்தம்மாள், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் முருகேச பாண்டியன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி