மதுரையில் 2 அமைச்சர்கள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு

மதுரையில் 2 அமைச்சர்கள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு
X

மதுரையில் நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர்.

மதுரையில் 2 அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்வில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல் துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

அதே நேரத்தில் மதுரையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த்,மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா,மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல்,வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி,மாநகர காவல் ஆணையர் லோகநாதன்,உதவி ஆட்சியர் பயிற்சி வைஷ்ணவி பால்,சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி,புதூர் பூமிநாதன்,மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி,மண்டலத்தலைவர் சரவண புவனேசுவரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர்.இந்நிகழ்வில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை அப்போது அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது