மதுரை மீனாட்சியம்மன் சிறப்பு தரிசனம் மூலம் 15 கோடி வருவாய்
பைல் படம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் மூலம் சுமார் 15 கோடியே 11,71, 200 வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சிறப்பு தரிசனம் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் உள்ளதாகவும் இதனால் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக தொடர்ந்து புகார் இருந்து வந்தது.
இந்நிலையில் மதுரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அளித்த பதிலில் சுமார் 15 கோடியே 11 லட்சத்து 71 ஆயிரத்தி இருநூறு ரூபாய் கடந்த 2020 முதல் 2022 வரை வருமானமாக கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு...மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது தான் இந்த மீனாட்சியம்மன் கோவில். பண்டைய காலத்தில் மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியனின் கனவில் வந்த சிவபெருமான் அவன் கடம்பாவன் என்ற காட்டை அழித்து மதுரை நகரையும் இந்த சிவசக்தி தளத்தையும் அமைத்து தந்திருக்கிறார்.
இந்த கோவில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இக்கோவிலில் 8 கோபுரங்களும் இரண்டு விமானங்களும் உள்ளது. எட்டு வெள்ளை நிற யானைகளும் 64 சிவலிங்கங்களும் 32 கருஞ்சீர்பங்களும் கருவறை விமானங்களை தாங்கி நிற்கிறது.இத்திருக்கோவில் தெற்கு வடக்காக 792 அடியும் கிழக்கு மேற்காக 842 அடியும் உள்ளது. கோவிலுக்கு முன்பாக இருக்கும் நான்கு கோபுரங்களும் மிகப்பெரிய உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக கோயிலுக்குள்ளேயே பத்து மிகப்பெரிய அழகுமிக்க மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் அஷ்ட சக்தி மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம், ஆயிரம் கால் மண்டபம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
மேலும் ஒவ்வொரு மண்டபத்திற்கும் ஒவ்வொரு தனித்தனி சிறப்புக்கள் அமைந்துள்ளது மேலும் அவை வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டு முழுமையாக்கப்பட்டுள்ளன.இந்த மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க காலை 5:30 மணியில் இருந்து மதியம் 12:30 மணி வரை அம்மனை தரிசிக்கலாம்.
மேலும் வருடத்தில் உள்ள 12 மாதங்களும் அதாவது மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சித்திரை மாதத்தில் மட்டுமே முழுமையான திருவிழா கொண்டாடப்படும் அதுவும் சித்திரை பௌர்ணமி நாளில் இந்திரன் வந்து மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரனையும் வணங்குவதாக புராணங்கள் கூறப்படுகிறது.
இத்திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் திருக்கோவிலை 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோவிலை கட்டுவதற்கு பல்வேறு வருடங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நான்கு கோபுரங்களில் தெற்கு கோபுரம் மட்டுமே மிக உயரமானது இதன் அடி சுமார் 160 அடியாக இருக்கிறது.
பண்டைய காலத்தில் பாண்டியர்கள் சேரர் சோழர் என்ற மூன்று பெரும் சாம்ராஜ்யங்கள் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தனர்.இதில் பாண்டி அவர்கள் கட்டிடக்கலையில் கைதேர்ந்தவராகவும், சோழர்களும் கட்டிடக் கலையில் மிக கை தேர்ந்தவர்களாகவும் காணப்பட்டனர்.மதுரை மாநகரம் என்றாலே நம் மனதில் நினைவுக்கு வருவது உடனே மீனாட்சி அம்மன் கோவில் மட்டும் தான்.இந்த மதுரையில் உள்ள கோவில்தான் பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் தலைநகரமாக இருந்து வந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu