மதுரையில் 1.8 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

மதுரையில் 1.8 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
X
மதுரை ஊமச்சிகுளத்தை அடுத்த சாஸ்திரி நகரில் கஞ்சா விற்ற முனியசாமி என்பவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் சாஸ்திரி நகர் பகுதியில், கஞ்சா விற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது . தகவலின் அடிப்படையில், சிறப்பு தனிப்படை காவலர்கள் எஸ்.ஐ. நாகநாதன் தலைமையிலான போலீசார், உமச்சிகுளம் சாஸ்திரி நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு, முனியசாமி என்பவர் கஞ்சா விற்பது உறுதியானது. அவரிடம் இருந்த 1.800 கிலோ கிராம் எடையை கொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர் .மேலும் அவரிடம் பணம் கஞ்சா விற்ற இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு