மதுரையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்.
மதுரை மாவட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), பி.அய்யப்பன் (உசிலம்பட்டி), மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் காலோன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சூரியகலா கலாநிதி, மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்டத்தைப் பொருத்தமட்டில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில், பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. விவாதிக்கப்படும் துறைகளில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் அடுத்து நடத்தப்படும் இக்கூட்டத்தில் நிறைவு செய்துள்ளார்கள் என்பது குறித்து விவாதிக்கப்படும். மாநில அரசின் மூலமாகவும் தமிழ்நாடு அரசின் மூலமாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்று சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மதுரை மாவட்ட மக்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கும் வகையில் செயலாற்றி வருகின்றோம். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவதோடுஇ அத்திட்டங்களின் பயன்கள் மக்களை சென்று சேருவதில் தேக்கநிலை இருந்தாலும் அவற்றையும் சரி செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயலாற்றி கொண்டிருக்கின்றோம். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட குறைகளையெல்லாம் அந்தந்த துறைகளின் அலுவலர்கள் உடனடியாக அக்குறைகளின் மீது உரிய நடவடிக்கை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழுமையாக சென்று சேருகிறதா என்பதை ஆராய்வதற்காக இந்திய அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைப்பாகும். தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு அமர்வில் அமர்ந்து அரசின் திட்டங்கள் குறித்தும், அமலாக்கம் குறித்தும், செயலாக்கம் குறித்தும் விவாதிப்பது என்பது ஜனநாயகத்தின் முக்கியமான செயலாகும்.
மதுரை மாவட்டத்தைப் பொருத்தமட்டில் 17-வது நாடாளுமன்றத்திற்குப் பிறகு நடத்துகின்ற ஒவ்வொரு கூட்டமும் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது.
சில சமயங்களில் 5 முதல் 6 மணி நேரம் வரை அமைப்பு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தை சிறப்பாக நடத்துகின்ற மாவட்டமாக மதுரை மாவட்டம் விளங்குகின்றது. கடந்த 19.05.2022-அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருண்மைகள் சரிசெய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் திட்டங்கள், ஒன்றிய அரசின் திட்டங்கள், மாவட்டத்தின் வளர்ச்சி மக்களின் நலன் ஆகியவற்றை குறித்து இக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சுகாதாரத்துறை உள்ளிட்ட 14 துறைகள் குறித்து கடந்த 19.05.2022-அன்று விவாதிக்கப்பட்ட பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu