ஸ்டாலின் முதல்வர் ஆவார் : பொன்.ராதா கிருஷ்ணனிடம் கூறிய பெண்

ஸ்டாலின் முதல்வர் ஆவார் : பொன்.ராதா கிருஷ்ணனிடம்  கூறிய பெண்
X
ஸ்டாலின்தான் தமிழக முதல்வர் ஆவார் என்று பொன்.ராதாகிருஷ்ணனிடம் பெண் ஒருவர் வலியுறுத்தி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

த‌மிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்ம‌ன் கோவிலில் சாமி த‌ரிச‌ன‌ம் மேற்கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிட‌ம் ஸ்டாலின் தான் முத‌ல்வ‌ர் ஆக‌ வேண்டும் என‌ கூறிய‌ பெண்ணால் ச‌ல‌ச‌ல‌ப்பு ஏற்பட்டது.

த‌மிழ் புத்தாண்டை முன்னிட்டு உல‌க‌ புக‌ழ்பெற்ற மதுரை‌ மீனாட்சி அம்ம‌ன் கோவிலில் முன்னாள் ம‌த்திய‌ இணை அமைச்ச‌ரும்,க‌ன்னியாகும‌ரி ம‌க்க‌ள‌வை தொகுதி தேர்த‌ல் வேட்பாள‌ருமான‌ பொன்.ராதாகிருஷ்ண‌ன் சாமி த‌ரிச‌ன‌ம் செய்து விட்டு செய்தியாள‌ர்க‌ளிட‌ம் பேசினார்.

அதன்‌ பின்ன‌ர் அப்ப‌குதியில் உள்ள‌ பெண் ஒருவ‌ர் பொன்.ராதாகிருஷ்ணனிட‌ம் சென்று ஸ்டாலின் தான் முத‌ல்வ‌ர் ஆக‌ வேண்டும் என‌வும் அத‌ற்காக‌ தான் சாமி த‌ரிச‌ன‌ம் மேற்கொண்ட‌தாக‌ அந்த‌ பெண் கூறினார். பொன்.ராதாகிருஷ்ணனிடமே ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார் என பெண் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சூழலை அறிந்த பொன்னார் சிரித்தவாறு அங்கிருந்து நகர்ந்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!