மதுரை: பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து தொழிற் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து தொழிற் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
X
அனைத்து தொழிற்சங்கம் சார்பில், மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசுக்கு எதிராக மதுரையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. அத்தியாவசிய பாதுகாப்பு சேவை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஐ.ஓபி.பேங்க், யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, பல்வேறு அரசு துறைகளை, தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக்கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கசங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், திமுக, மதிமுக,ஹெச்எம்எஸ், டி.ஆர்.இ.யூ மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!